வருகிற டிசம்பர் மாதம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இஸ்தான்புல்லில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் பங்குயேற்க வேண்டுமெனில் இந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்க இருக்கும் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும்.
கடந்த ஜூலை மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரணத்தால் லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று உள்ளார். 24 வயதான லவ்லினா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விட்ட காரணத்தால், இவர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தைத் தவிர்த்துள்ளார்.
























