இயக்குநர் ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கும் ஐந்தாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இத்திரைப்படத்தில் நிவின் பாலி – அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்.
கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம். அதனைத் தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தனது ஐந்தாவது திரைப்படத்தின் பணிகளில் இயக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

மலையாள நடிகர் நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று தனுஷ்கோடியில் தொடங்கியிருக்கிறது. ’மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிவின் பாலியுடன் , அஞ்சலி , சூரி உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர்.
ராமின் படங்கள் எப்போதும் சமூகத்துக்கான அரசியலைப் பேசுபையாகவும், மனித உறவுகளுக்கிடையேயான அன்பைச் சொல்வதாகவும் இருக்கும். ஆகவே அவருக்கென தனியே ஓர் ரசிகப்பரப்பு இருக்கிறது. அவரது ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
























