50வது ஐ.பி.எல். போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 43 பந்துகளில் 55 ரன்களை எடுத்திருந்தார். ராபின் உத்தப்பா 19 ரன்களையும், கெய்க்வாட் 13 ரன்களையும், தோனி 18 ரன்களையும் எடுத்திருந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணி, 137 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்காளாக களமிறங்கிய பிரித்வி ஷா 18 ரன்களும், ஷிகர் தவான் 39 ரன்களையும் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் 15 ரன்களும், ரிபால் படேல் 18 ரன்களையும் குவித்தனர். இவர்களையடுத்து களமிறங்கிய அஸ்வின் 2 ரன்களில் அவுட் ஆக, ஷிம்ரான் ஹெட்மியர் 28 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.

கடைசியாக டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டெல்லி அணி சென்னையை முந்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
























