கடந்த முப்பது நிமிடங்களாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் முடங்கியுள்ளது. இந்தச் செயலிகள் முடங்கியது குறித்த தகவல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த முடக்கம் எதனால் ஏற்பட்டது என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலு இந்த முடக்கம் இந்தியாவில் மட்டும்தானா, உலகம் முழுவதுமா என்பது குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

மக்கள் இதனால் செய்திகள் பெற முடியாமலும் அனுப்ப முடியாமலும் தவித்து வருகின்றனர். அதே நேரம், நெட்டிசன்கள் இந்த முடக்கம் குறித்து உடனே மீம்ஸ்களை உருவாக்கி டிவிட்டரில் பகிர்ந்தும் வருகின்றனர்.
























