தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து திருக்குறள் நூலை வழங்கினார்.
தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்தவர் எல்.முருகன். பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அவர் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி எல். முருகன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானமைக்காக பிரதமரிடம் வாழ்த்து பெற்ற அவர் பிரதமருக்கு நினைவு பரிசாக திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.
























