IBM நிறுவனத்தில் மூத்த தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றும் இயன் க்ளிஃபோர்ட் என்ற நபர் தனக்கு 15 வருடங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்று அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், கடந்த 15 வருடங்களாக அவர் வேலையே செய்யவில்லை!… குழப்பமாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்.
இயன் க்ளிஃபோர்ட் சில மருத்துவ காரணங்களுக்காக கடந்த 2013ம் ஆண்டிலிருந்து பணி எதுவும் செய்யாமல் Sick Leave எனப்படும் நோய்க்கால விடுப்பில் இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த 15 வருடங்களாக IBM நிறுவனம் தனக்கு எந்தவித ஊதிய உயர்வும் வழங்கவில்லை என்ற விசித்திரமான குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். மேலும் தன்னுடைய உடல்நலக் குறைபாட்டை காரணமாகக் கொண்டு நிறுவனம் தன்மீது பாகுபாடு காட்டுவதாகவும் அவர் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
2013ல் தனது உடல்நிலை பணி செய்ய ஒத்துழைக்காமல் போகவே இவருக்கு IBM நிறுவனம் ஒரு சலுகையை வழங்கியுள்ளது. அதாவது எந்தவொரு நபரும் நோய்க்கால விடுப்பில் இருக்கும் சமயம் நிறுவனம் அவர் உடல்நலம் தேறும் வரையிலோ, அல்லது பணி ஓய்வு அல்லது மரணம் இதில் எது முதலோ அதுவரை அவரது ஊதியத்தில் 75%-ஐ அளிக்கவேண்டும். அந்த வகையில் இயனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 54,28 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் இத்தனை ஆண்டுகளாக தனது பங்கைப் பெற்றுக்கொண்டு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்று இயன் வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது வழக்கு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்த விளக்கமளித்த நீதிபதி, பணியிலில்லாத ஊழியர்கள் ஊதிய உயர்வு பெற தகுதியானவர்கள் அல்லர் என்று கூறினார். மேலும், ஊனமுற்றோர் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என்பதால் சம்பள உயர்வு இல்லாதது பாரபட்சம் அல்ல என்று நீதிபதி விளக்கமளித்தார்.


























