மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் குட் நைட்.
இந்த திரைப்படத்தில் ஜெய் பீம் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.
கதைச்சுருக்கம் :-
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கு சிறு வயது முதலே அதிக சத்தத்துடன் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதனால் அவரது குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் பாதிக்கிறது அவரது குறட்டை. இறுதியாக தான் விரும்பிய காதலியும் கூட குறட்டை விஷயத்தால் மணிகண்டனை கைவிடுகிறார். தான் எப்போதுமே ராசி இல்லாதவள் என நினைக்கும் மீத்தா ரகுநாத்க்கும், மணிகண்டனுக்கும் இடையே காதல் வந்து கல்யாணத்தில் முடிகிறது. அதன் பின்பு தன் கணவரின் குறட்டையால் மீத்தா ரகுநாத் என்ன முடிவெடுத்தார்? குறட்டையை கண்ட்ரோல் பண்ண மணிகண்டன் எடுத்த முயற்சிகள் கைகொடுத்ததா? குறட்டையால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதி கதை.
மோகன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். மணிகண்டன். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்க வைக்கிறது. சிரிக்க வைக்கிறது. அனு கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் இருக்கிறார் “முதல் நீ முடிவும் நீ” படத்தில் கதாநாயகியாக நடித்த மீத்தா ரகுநாத். ஹீரோயின் மாமாவாக ரமேஷ் திலக், அக்காவாக ரேச்சல், தாத்தா பாட்டியாக பாலாஜி சக்திவேல் – கௌசல்யா ஆகியோர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு கணக்கச்சிதமாக பொருந்தி போகிறார்கள்.
லவ் டுடே, டாடா மாதிரியான படங்கள் வரிசையில் இந்த சம்மருக்கு செம்ம பேமிலி என்டர்டைன்மெண்ட் படம். அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் சின்ன கதையை வைத்து சமூகத்தில் பல குடும்பங்களில் நடக்கும் விஷயத்தை இயல்பாக காட்டியிருப்பது சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை அளிக்கக் கூடிய இயக்குனராக வர வாய்ப்பு இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் அவர்களின் ஒளிப்பதிவு அருமை. ஐடி கம்பெனி. மிடில் கிளாஸ் ஹோம் என தனது கேமரா கோணங்களில் கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தொகுப்பாளர் பரத் விக்ரமனுக்கு வாழ்த்துக்கள். திரைக்கதைக்கு தகுந்தவாரு சிறப்பாக தனது கட்ஸ்களை பயன்படுத்தி இருக்கிறார். ஜான் ரோல்டனின் பின்னணி இசை படத்திற்கு நன்றாகவே கை கொடுக்கிறது. பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மலையாள படங்கள் மீது சமீபத்தில் மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. எல்லா மொழி மக்களும் மலையாள சினிமாக்களை தற்போது விரும்பி பார்க்கிறார்கள். எளிமையான கதையாக இருக்கிறதே? சிம்பிள் பட்ஜெட்ல இருக்கிறதே எப்படி எடுத்தார்கள்? அப்படின்னு சொல்லிட்டு ரொம்பவே ஆச்சரியப்படுகிறார்கள். அந்த வகையில் சின்ன பட்ஜெட்டில் தமிழில் ஒரு சூப்பர் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படம் வந்திருக்கிறது. மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
- செ.சங்கீத் குகன்
திரைப்பட விமர்சகர்

























