நியூயார்க்கில் இருந்து டெல்லி கிளம்பிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தன்னுடன் அதே விமானத்தில் பயணித்த சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
AA 292 என்ற எண் கொண்ட அந்த விமானம் சுமார் இரவு 9 மணியளவில் ஜே.எஜ்.கே, விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில், குடிபோதையில் கட்டுப்பாடற்ற அ ந் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அதில் பயணித்த பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான எண் AA 292 ஜான் எஃப்.கென்னடி விமான நிலையத்திலிருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தில் இருந்த சமயம் விமானத்தில் ஏற்பட்ட சில இடையூருகளின் காரணமாக சில உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளைச் சந்தித்த்து என்று தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள அ ந் நிறுவனம் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் கவனிப்புக்கு தொடர்ந்து அர்ப்பணித்து, சூழ்நிலைகளை மிகுந்த சமயோசிதபுத்தியுடன் கையாளும் எங்கள் குழு உறுப்பினர்களுக்கு நாங்கள் நன்றிதெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.


























