‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் மூலம் 50 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்கு செல்லவிருக்கும் விண்வெளிப் பயணத்திற்கான வீர்ர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது.
’ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் மூலம் நிலாவுக்குச் செல்லும் நால்வர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. அதன்படி கனடிய விமானப்படையின் கர்னல் மற்றும் நிலவுப் பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கனடியரான ஜெர்மி ஹேன்சன், அமெரிக்க கடற்படை விமானி மற்றும் நான்கு விண்வெளி நடைப்பயணங்களில் அனுபவம் வாய்ந்த விக்டர் குளோவர், நாசாவின் முதல் மூன்று பெண் விண்வெளிப் பயணங்களின் முக்கிய அங்கமாக விளங்கிய கிறிஸ்டினா கோச் மற்றும் முன்னாள் அமெரிக்க கடற்படை போர் விமானி ரீட் வைஸ்மேன் ஆகியோர் நிலவுக்கான விண்வெளிப் பாதைக்குச் சென்று திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதில் விக்டர் குளோவர் நிலவுக்கு அனுப்பப்படும் முதல் கருப்பினத்தவர் மற்றும் கிறிஸ்டினா கோச் நிலவுக்கு அனுப்பப்படும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகின்றனர். ’ஆர்ட்டெமிஸ் 2’ பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாசா விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முந்தைய பயணங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஹேன்சன் ஒரு விண்வெளிப் பயணம் செய்பவர்.
நாசாவின் பணிக் கட்டுப்பாட்டுத் தளமான ஜான்சன் விண்வெளி மையத்தின் ஹூஸ்டனில் இருந்து ஒளிபரப்பப்பட்ட, பத்திரிகையாளர்கள், உள்ளூர் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மற்றும் விண்வெளித் துறைத் தலைவர்கள் கலந்து கொண்ட ’பெப் பேரணி’ போன்றதொரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த ஆர்ட்டெமிஸ் 2.
இதுகுறித்து கூறிய நாசா நிர்வாகி பில் நெல்சன் ”ஆர்ட்டெமிஸ் 2 குழுவினர் ஆயிரக்கணக்கான மக்களை நட்சத்திரங்களுக்கு கொண்டு வர அயராது உழைக்கின்றனர்; இது மனிதகுலத்திற்கான குழு” என்று தெரிவித்துள்ளார்.
10 நாட்கள், 1.4 மில்லியன் மைல் பயணம் (2.3 மில்லியன் கி.மீ.) சந்திரனைச் சுற்றி மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த ஆர்ட்டெமிஸ் 2 பயணத்தின் நோக்கம், ஓரியனின் அனைத்து உயிர்கள் மற்றும் ஆதரவு கருவிகளும் மற்ற அமைப்புகளும் விண்வெளி வீரர்களுடன் விண்வெளியில் வடிவமைக்கப்பட்டபடி செயல்படும் என்பதை நிரூபிப்பதேயாகும்.
’ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் தனது பயணத்தை இன்னும் 10 நாட்களில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வீரர்கள் நிவுவை அடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சுமார் 1 வருட காலத்திற்கு அங்கு தங்கி ஆயாய்ச்சிகளில் ஈடுபட அனைத்துவிதமான வசதிகளுடன் கூடிய இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























