+2 தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், மொழித்தேர்வை எழுதாமல் 50,000 மாணவர்கள் இன்று ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று +2 மாணவர்களுக்கான தேர்வு தொடங்கியது. இத்தேர்வை மொத்தம் 8,51,303 மாணவ, மாணவிகள், 23,747 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,75,050 பேர் எழுதுகின்றனர்.
இத்தேர்வுகளுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்லன. இந்த நிலையில், இன்று முதல் பாடமான மொழித்தேர்வு நடைபெற்றது.
இதில் மொழித்தேர்வு எழுதாமல் 50,674 மாணவர்கள் ஆப்செண்ட் ஆகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 49,559 மாணவர்களும், 1,115 தனித்தேர்வர்களும் மொழிப்பாடத் தேர்வை எழுதாமல் ஆப்செண்ட் ஆகியுள்ளனர்.


























