வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலிகளை உடைத்து நாசம் செய்த மாணவர்களை அப்பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள்து.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் அமானி மல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், வகுப்பில் உள்ள மேசை மற்றும் நாற்காலிகளை மாணவர்கள் சிலர் ஆவேசத்துடன் போட்டு உடைத்து நொறுக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அனுப்பும்படி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசாமிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் தரப்பில், தலைமை ஆசிரியரின் விரிவான விசாரணை அறிக்கையின்படி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதைத் தடுக்காத அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 5 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


























