வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 1ன் டிரெய்லர் மற்றும் இசை வெளியானது.
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை RS Infotainment நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.
க்ரைம் திரில்லர் ரக பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறனின் திரைப்படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய நிறைவான இயக்கம் மற்றும் தெளிவான காட்சியமைப்புகள் மூலம் படத்தை எல்லா தரப்பு மக்களையும் ரசிக்கவைத்துவிடுவார்.
அந்த விதத்தில் இவர் இயக்கியுள்ள விடுதலை படத்தின் டிரெய்லர் மர்றும் இசை இன்று வெளியாகும் என்று கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் இணையத்தில் இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


























