சிலம்பரசன் நடித்து வெளிவரவிருக்கும் பத்து தல படத்தின் டீசர் காணொலி இணையத்தில் வெளியானது!
சிலம்பரசன் நடிப்பில், ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ’பத்து தல’. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேங்ஸ்டர் க்ரைம் த்ரில்லர் கதையமைப்பைக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் இப்படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ’நம்ம சத்தம்’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்பட்டத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நான் படியேறி மேல வந்தவன் இல்ல… எதிரிகள மிதிச்சேரி மேல வந்தவன்’ உள்ளிட்ட தெறிக்கவிடும் வசனங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. பத்து தல படத்தின் மூலம் தனது மூன்றாவது ஹாட்ரிக் வெற்றியை சிலம்பரசன படைப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பத்துதல படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு.


























