தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் இருப்பதாக பாஜக தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதம் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தவிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தரப்பு வழக்கறிஞர், பேரணி விஷயத்தில் தமிழ்நாடு அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள 50 மாவட்டங்களிலும் அனுமதி மறுக்கப்படுவதாகப் பேசினார். இது நீதிமன்றத்தில் சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆர்.எஸ்.எஸ் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர், ’தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லையே’ என்று கிண்டலாகப் பேசினார். இது அவ்விடத்தில் சற்றே நகைப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், பங்கஜ் மித்தல் கொண்ட அமா்வு, இவ்வழக்கை மார்ச் 17ம் தேதி ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது.


























