சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா – ராஷி கண்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் அரண்மனை 3 படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவிருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் அரண்மனை. பேய்ப்படம் என்றால் சுந்தர்.சி பாணியில் கலகலப்புக்கு பஞ்சமில்லாத அத்திரைப்படம் நல்ல எண்டெர்டெய்னிங் திரைப்படமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை 2 படத்தை இயக்கஅதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அரண்மனை படத்தின் மூன்றாவது பாகம் தயாராகியிருக்கிறது. ஆர்யா – ராஷிகண்ணா ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படமும் முந்தைய பாகங்களைப் போன்றிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ஆண்ட்ரியா, சம்பத், யோகி பாபு போன்று பெரும் பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் ரப்பட்டா என்கிற பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகியது. அப்பாடலில் திரைப்பட உருவாக்கமும் திரைப்படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் நாளை வெளியாகவிருக்கிறது. சுந்தர்.சி ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
























