தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் கருணாஸும் அவரது மகன் கென்னும் தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மித்ரன் ஆர் ஹவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். இப்பட்த்தின் படப்பிடிப்பு தற்போது புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் கருணாஸும் அவரது மகன் கென்னும் தனுஷை சந்தித்த புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. கருணாஸ் மகன் கென் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். அதனைத்தொடர்ந்து இத்திரைப்படத்திலும் கென் நடிக்கக்கூடுமோ என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
























