விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தைத் தொடந்து விஜய்யின் அடுத்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதில் குறிப்பாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வலம் வந்தன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
The news we have been waiting to make official !!!
— Sri Venkateswara Creations (@SVC_official) September 26, 2021
A very proud moment for us. Happy to share that we will be producing the prestigious #Thalapathy66 with Thalapathy @ActorVijay sir and @directorvamshi pic.twitter.com/dvR1XxESwb
இந்நிலையில் தற்போது தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார், இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இதன் மூலம் தனது 29 ஆண்டு கால திரைப்பயணத்தில் முதன் முறையாக பிறமொழி படமொன்றில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைவது பெருமையாக இருப்பதாக தில் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘தளபதி 66’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
























