வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடலையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. வரை வீசியது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிஷா – ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட ‘குலாப்’ எனும் பெயர், புதிதாக உருவாகும் புயலுக்கு வைக்கப்படுகிறது.
























