இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று நடைபெறுகிறது.
’குவாட்’ மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேசினார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
குவாட் உச்சி மாநாடு, இந்தோ – பசிபிக் பிராந்திய உறவுகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹாவையும் சந்தித்து பேசினார். இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
























