அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அப்படத்தின் ‘க்ளிம்ப்ஸ்’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
’சதுரங்க வேட்டை’ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் அஜித்தை வைத்து ‘வலிமை’ படத்தினை இயக்கியுள்ளார். இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தினைத் தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக அப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘நாங்க வேற மாதிரி’ என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதன் பிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்கிற அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்ததும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியான நிலையான நிலையில் க்ளிம்ப்ஸ் வெளியாகவிருக்கிறது. அதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர். எப்படியும் கூடிய விரைவில் டீசர் வெளியாகும் என்கிற நம்பிக்கை தற்போது ரசிகர்களிடம் மேலோங்கியிருக்கிறது.
























