தமிழக அரசு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளது. ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 10 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபியாக, ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்துவந்த ஜெயந்த் முரளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை ஏடிஜிபியாக, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி நிஷா கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
























