மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தது சி.பி.ஐ. விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 5 மாணவர்கள் நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதற்காக, ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு கைதுகளும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஆள்மாறாட்டம் செய்ய, நீட் விண்ணப்பதாரர்களிடம் 50 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி நடந்திருப்பதாகக் குறிப்பிட்ட சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
























