ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா ஆகிய ஐந்துவகை காண்டாமிருக பிரிவுகளையும் இந்த நாள் கொண்டாடுவது என்பது குறிப்பிடத்தக்கது.
காண்டாமிருகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக செப்டம்பர் 22ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.உலக காண்டாமிருக தினமானது 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் அறிவிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் கடந்த 11 ஆண்டுகளாக உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
20ஆம் நூற்றாண்டில் 5 லட்சமாக இருந்த இப்பேருயிரின் எண்ணிக்கை தற்பொழுது 27000 மட்டுமே என்று குறைக்கப்பட்டுள்ள நிலையில் கொம்புகளுக்காகவும், வணிகத்திற்காகவும் எஞ்சியுள்ள காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படும் அவல நிலையை ஒழித்து இந்நிலப்பகுதியின் இப்பேருயிரை வாழ விடுவோம்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
























