இந்தியாவின் தங்க மங்கைகளில் ஒருவரான பி.வி.சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடி தான் சில கலோரிகளை எரித்துக் கொண்டதாக அப்புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியை ஊக்குவிக்கும் விதமாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவருக்கு விருந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடியுள்ளார். விளையாட்டு வீராங்கனைகளுக்கு இணையாக நடிகைகளும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அப்படியாக உடற்பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தீபிகா இந்த விளையாட்டின் மூலம் தான் சில கலோரிகளை எரித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டு சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.
























