ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இத்தொடருக்குப் பிறகு அப்பொறுப்பிலிருந்து விலகி பேட்ஸ்மேனாக மட்டுமே தொடரவிருப்பதாக தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்திய அணியின் மூன்று வகை போட்டிகளுக்கான கேப்டனாகவும் இருப்பவர் விராட் கோலி. விரைவில் நடக்கவிருக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு டி 20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கொலி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. நடந்து கொண்டிருக்கு ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகவிருப்பதாக கோலி தெரிவித்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பெங்களூரு அணி ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, கேப்டன் பொறுப்பு வகிப்பதன் காரணமாக பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை என்றும், கேப்டன் பதவியைத் துறந்து விட்டு பேட்டிங்கில் முழுமையான கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
























