தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சரவையில் இடம் பிடித்தார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களைவை பதவிக்கான வேட்பாளராக எல். முருகனை அறிவித்திருக்கிறது பா.ஜ.க தலைமை. வரும் அக்டோபர் மாதம் 4 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.
























