தந்தை பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமியின் 143வது பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்தி ட்வீட் செய்திருக்கிறார்.
பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘சுதந்திரம், தைரியம், சமத்துவம் ஆகிய பெரியாரின் கருத்துகளை அவர் பிறந்த நாளில் நினைவுகூர்வோம் என்றும் “எந்த ஒரு கருத்தினையும் மறுப்பதற்கு அனைவருக்கும்
உரிமை உண்டு, ஆனால் அந்த வெளிப்பாட்டை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்கிற வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் இன்று பிறந்த நாள். அதற்காக பிறந்த நாள் வாழ்த்துகள் நரேந்திர மோடிஜி என்று மட்டும் அவர் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
























