தந்தைப் பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமியின் 132வது பிறந்த நாளையொட்டி இந்தியா முழுவதிலிருந்தும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்விட்டரில் வாழ்த்துப் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில் ‘பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டியது கேரள முதல்வர் தமிழில் ட்வீட் செய்திருப்பதுதான். ராகுல் காந்தி உட்பட தேசியத் தலைவர்களும் பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நிலையில் இந்திய அளவில் பெரியாரின் புகழ் பரவியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
























