பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியிருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடிக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ராதிகா, ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பே முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 51 நாட்கள் காரைக்குடியில் நடைபெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் தென்காசி பகுதியில் தொடங்கியிருக்கிறது. குடும்பத்தை மையமாக வைத்து படம் இயக்குகிறவர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் வந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் இத்திரைப்படமும் வெற்றிப்படமாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
























