தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த கும்பகோணம் சிவா, ரங்கா, மயிலாடுதுறை ராஜசேகர், சீர்காழி சுரேஷ், திருவோணம் திருப்பதி ஆகியோர் ஏஜென்ட் மூலம் பணம் கட்டி கடந்த டிசம்பர் மாதம் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளனர். அங்கு, அவர் அதிகமான பணி மற்றும் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டனர். இதனால் தன்னை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள், வேலை வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதற்கு ஒப்பந்த நிறுவனம், ஒப்பந்த காலம் முடியும் முன்பு அனுப்ப முடியாது என்று கூறி, பாஸ்போர்ட்டை பறித்து கொண்டது.
இதுகுறித்து கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களிடம் தங்கள் உறவினர் மூலம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மூலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் நாம் தமிழர் கட்சியின் ஓமன் நாட்டு பிரிவான செந்தமிழர் பாசறைக்கு தகவல் தெரிவிக்க, செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள தமிழர்களை தங்களது சொந்த பொறுப்பில் மீட்டுதாயகத்திற்கு அனுப்பி வைத்தார்கள் ஓமன் செந்தமிழர் பேரவையினர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தாயகம் திரும்பிய பாதிக்கப்பட்ட 5 தமிழர்களும் இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த், கும்பகோணம் மாநகரச் செயலாளர் கார்த்திகேயன், ராஜசேகர், தம்பி அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
























