தெலுங்கானாவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான பல்லகொண்ட ராஜு என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பல்லகொண்டராஜு இம்மாதம் 9 ம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெலுங்கானா போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அவரைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ராஜு குறித்த தகவலைத் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர். பல்லகொண்டா ராஜு என்கவுண்டர் செய்யப்படுவார் என தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று கான்பூரில் ரயில் முன் பாய்ந்து ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிரதேத்தைப் பரிசோதித்த போது அங்க அடையாளங்களை வைத்தும் கையில் பச்சை குத்தியிருந்ததை வைத்தும் அது தேடப்படும் குற்றவாளியான பல்லகொண்ட ராஜு என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
























