கொரோனா காலத்தின் தொடக்கத்தில் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய முன் வந்ததால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டிருந்தது. ஆனால் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை குறைந்து 4,452 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் விலை இறங்கி 35,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் ஆபரணத் தங்கம் சவரன் 38,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசு விலை குறைந்து 69 ரூபாய் 10 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
























