இந்தோனேஷியாவில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 1,225 கைதிகளை மட்டுமே அடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இச்சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சிறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 41 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான அளவில் கைதிகளை அடைத்து வைத்திருந்த சிறை நிர்வாகத்தின் மீது கண்டனக்குரல்களும் எழுந்து வருகின்றன.
























