இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகம் ஆகவிருக்கிறார். இப்படத்தினை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.
‘குட்டிப்புலி’ ‘கொம்பன்’ ‘புலிக்குத்திப் பாண்டி’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் முத்தையா. கொம்பன் திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்தியை நாயகனாக வைத்து ‘விருமன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முத்தையா யுவனுடன் இணைவது இதுவே முதல் முறை. இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாவதை படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். படத்தயாரிப்பாளரான சூர்யா அதிதியை வரவேற்றதோடு உச்சம் தொட வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.
வருக அதிதி!
























