Tag: Director Shankar

இயக்குனர் ஷங்கர் படத்தில் வில்லனாக சுரேஷ் கோபி…?

இந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, இயக்குனர் ஷங்கர் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேயில் தொடங்கியது. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ரகுமான், சுனில் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மலையாள நடிகர் சுரேஷ் கோபி படத்தில் வரும் பல வில்லன்களில் ஒரு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவியாக ஈஷா குப்தா நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்களை படம் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.  தில் ராஜு சுமார் 170 கோடிகள் பட்ஜெட்டில், ஆர்சி 15 என தற்காலியமாக  அழைக்கப்படும் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது ராம் சரண், கியாரா அத்வானி இடம்பெறும் பாடல் காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார். சுமார் இரண்டு வாரங்கள் இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமன் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவேமுதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News