14 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்க கூடிய உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடந்தன. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் என்ற சிறுமி கலந்து கொண்டார்.

இறுதி போட்டியில் சிறுமி தஜாமுல், அர்ஜெண்டினா வீராங்கனை லலீனாவுடன் விளையாடி தங்க பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டமும் வென்றுள்ளார். இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் காஷ்மீரி என்ற பெருமையை தஜாமுல் இஸ்லாம் பெற்றுள்ளார்.
























