மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் காலமானார்.
மூச்சுத் திணறல் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல் ஏ.வான என். நன்மாறன் (வயது 74) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
நன்மாறன், கடந்த 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
























