விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா உட்பட 11 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தயான் சந்த் விருது கொடுத்து கவுரவிக்க பரிந்துரைத்துள்ளது தேசிய விளையாட்டு விருதுகள் குழு. அதேபோல 35 தடகள வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 11 பேர்:
நீரஜ் சோப்ரா(ஈட்டி எறிதல்)
ரவி தாஹியா(மல்யுத்தம்)
பி.ஆர்.ஸ்ரீஜேஷ்(ஹாக்கி)
லாவ்லினா போர்கோஹைய்ன்(குத்துச் சண்டை)
சுனில் சேஹெட்ரி(கால்பந்து)
மிதாலி ராஜ்(கிரிக்கெட்)
ப்ரமோத் பாகத்(பேட்மின்டன்)
சுமித் அன்டில்(ஜாவ்லின்)
அவனி லீக்ஹரா(துப்பாக்கிச்சூடு)
கிருஷ்ணா நகர்(பேட்மின்டன்)
நர்வால்(துப்பாக்கிச் சூடு)
























