சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானதை அடுத்து திரைத்துறையினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
இமான் இசையில் இதுவரை ‘அண்ணாத்த அண்ணாத்த’ ‘சாரக் காற்றே’ ‘மருதாணி’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. மேலும், இம்மாதம் 14ம் தேதி அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விருந்தாய் இன்று மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது. ரஜினியின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களமாக அமைந்துள்ளது. ரஜினி கிராமத்து சிங்கமாக இளமை ததும்ப காட்சியளிப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் ட்ரெயிலரை பகிர்ந்து வருகின்றனர். இந்த தீபாவளிக்கு சரவெடியாக அண்ணாத்த படம் வெடிக்கும் என்கிற நம்பிக்கையை ட்ரெய்லர் கொடுத்திருக்கிறது.
























