இந்திய அணியில் 11 வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடினாலும் தோல்விக்குக் காரணமாக ஒரேயொரு இசுலாமிய வீரர் மட்டும் குறிவைத்துத் தாக்கப்படுகிறார் என்று அசாசுதீன் ஓவைசி கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இ்ந்திய அணி தோல்வி அடைந்ததற்கு சமூகவலைதளங்களில் மொகமது ஷமியி ட்ரால் செய்யப்பட்டு அவதூறு செய்யப்பட்டு வருகிறார்.
இந்த செயல்பாடு, முஸ்லீம்கள் மீதான வெறுப்பு, தீவிர மனக்கசப்பு ஆகியவற்றையே குறிக்கிறது. கிரிக்கெட் என்பது விளையாட்டு அதில் வெற்றியும் பெறலாம் தோல்வியும் கிடைக்கும். அணியில் 11 வீரர்கள் விளையாடியபோது, ஏன் ஒரே ஒரு முஸ்லிம் வீரர் மட்டும் குறிவைக்கப்பட்டார். இதை பாஜக கண்டிக்குமா. இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடத்தக்கூடாது என நான் ஏற்கெனவே கூறியிருந்தேன், இந்தப் போட்டி நடந்திருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர்களும், பல வீரர்களும் கிரிக்கெட்டை ஒரு ஆட்டமாகப் பார்க்காமல் அதை அரசியல் முன்முடிவுகளுடன் அணுகுவதை கண்டித்துள்ளனர். முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், இர்பான் பதான் ஆகியோர் ஷமிக்கு ஆதரவாக சமூக வலைதளம் மூலம் ஆதரவு தெரிவித்தனர்
துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தி்த்தது. பாகிஸ்தான் முதல் வெற்றியப் பெற்று புதிய வரலாற்றை எழுதியது.

புவனேஷ்வர் குமார் முதல் பும்ரா வரை யாரும் விக்கெட்டே எடுக்கவில்லை. எல்லா பவுலருமே மோசமாக வீசினர். இதில் முகமது ஷமியை மட்டும் குறிவைத்து அவதூறாக சமூக ஊகடங்களில் விமர்சித்தனர். ஷமியின் குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர் மீது அவதூறை அள்ளி வீசினர். இது கடும் கண்டனங்களுக்கு ஆளானது. தற்போது ஓவைசியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
























