வங்கதேசத்தில் துர்கா பூஜை நடைபெற்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு 4 இந்துக்கள் பலியாகினர். அவர்களின் இறப்புக்கு உரிய நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருக்கிறார்.
வங்கதேசத்தில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றது. இப்பூஜையின் போது பல்வேறு இந்து கோயில்களில் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன. இந்துக்கள் அதிகம் வாழும் 22 மாவட்டங்களில் துணை ராணுவப்படையினரை கலவரம் ஏற்படாத வகையில் பாதுகாப்புக்காக நியமித்தும் இக்கலவரம் ஏற்பட்டிருக்கிறது.
இக்கலவரத்தின் விளைவாக 4 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, ‘துர்கா பூஜையின்போது கலவரத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதனைக் கொண்டு விரைவில் தொழில்நுட்ப உதவியுடன் குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது உறுதி. இக்கலவரத்தால் இறந்த 4 இந்துக்களின் மரணத்துக்கு உரிய நீதி நிச்சயம் கிடைக்கும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
























