கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொண்டு வரப்பட்ட பொது முடக்கம் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் தாக்கம் குறைய ஆரம்பித்த பிறகு கட்டுப்பாடுகளுடனான தளர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை இரவு 10 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது 10 மணி என்கிற கால அளவை 11 மணிவரை நீடித்திருக்கிறது தமிழக அரசு. இனி அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்கலாம். கொரோனா தாக்கம் குறைந்து வரும் சூழலில் இனி மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























