இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மைசூரு தசரா பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் மற்றும் முதிவயவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. .
மைசூரு நகரில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை தினத்தன்று தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தசரா கொண்டாடப்படுகிறது. அந்நாளில் மைசூரு நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் தசராவுக்கு வருகை புரிவர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தசரா பண்டிகை குறித்த கட்டுப்பாடுகளை மைசூரு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 9 நாள்கள் நடைபெறும் தசரா கொண்டாட்டத்தில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு aptemples.ap.gov.in. என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் வசதிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























