தேர்தல் வந்தால் எல்லா கட்சிகளையும் விட நாம் தமிழர் கட்சி எப்பொழுதுமே முதலில் செயலில் இறங்கிவிடுவது வாடிக்கையாகப்போவிட்டது. 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தொடங்கி வரும் அக்டோபர் 1,6 தேதிகளில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் வரை வேட்பாளர் அறிவிப்பு தொடங்கி பிரச்சாரம் வரை தமிழக அரசியல் களத்தில் முதல் ஆளாக இறங்குவது சீமான் தான்.
அப்படிதான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்திடக்கோரி, இன்று 27-09-2021 காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்திலிருந்து முதல் ஆளாக பிரச்சார பரப்புரையை தொடங்கினார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.




























