இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.
இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கம் தர தவறினர்.
ராகுல் திரிபாதி அடுத்து களமிறங்கி நிலைத்து நின்று அதிரடியாக ஆடி, 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் போல்டானார்.
கொல்கத்தா அணி முதல் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. அடுத்த 5 ஓவர்களில் சென்னை அணி பௌவுளர்களின் சிறப்பான பந்துவீச்சால் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 1 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் குவித்தார்.
சென்னை அணியின் ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்துவீசி ஒரு விக்கெட் மெய்டன் ஓவர் உட்பட 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.
























