மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறை தொடர்பான விவகாரங்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து அதற்குப் பிறகு மாநிலம் முழுவதும் கடுமையான வன்முறை என்பது ஏற்பட்டது இதில் ஏராளமான கொலை கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை நிகழ்த்தப்பட்டது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள் ஆகியவை பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் இதுதடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வினித் சரண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை அனைத்து விதமான ஆவணங்களையும் முழுமையாக தாக்கல் செய்து விடுமாறும் வரும் இருபத்தி எட்டாம் தேதி முதல் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
























