தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பஞ்சாபின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோகித் சென்றுவிட்டதால் பீகாரைச் சேர்ந்த ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் ஆகும். ஆளுநராக பதவியேற்று, பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஆளுநருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆளுநரின் மனைவிக்கும் சால்வை வழங்கி கவுரவித்தார்.
பின்பு தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு கீழடி பற்றிய புத்தகமும் சென்னை பற்றிய பக்கமும் என 2 முக்கியமான புத்தகங்களை பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


































