ஆவின் பொருட்களின் திருத்தப்பட்ட விலைப்பட்டியல் நாளை முதல் அமலுக்கு வருகிறது. பண்டிகைக் காலத்தில் வரும் இந்த உயர்வில் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள், தயிர், மோர் உள்ளிட்டவை அடங்கும்.
நெய்: 100 மி.லி. ஜாடி ரூ.85-இலிருந்து ரூ.95; 200 மி.லி. ரூ.160-இலிருந்து ரூ.180; 500 மி.லி. ரூ.365-இலிருந்து ரூ.400; ஒரு லிட்டர் ரூ.700-இலிருந்து ரூ.780; 5 லிட்டர் ரூ.3,600-இலிருந்து ரூ.4,000; 15 கிலோ டின் ரூ.11,880-இலிருந்து ரூ.13,000.
வெண்ணெய்: 100 கிராம் ரூ.60-இலிருந்து ரூ.70; 500 கிராம் ரூ.275-இலிருந்து ரூ.320.
இனிப்புகள்: 250 கிராம் மைசூர்பாக் ரூ.140-இலிருந்து ரூ.160; 500 கிராம் ரூ.270-இலிருந்து ரூ.310; 250 கிராம் முந்திரி கத்லி ரூ.260-இலிருந்து ரூ.280; 250 கிராம் முந்திரி பிஸ்தா ரோல் ரூ.320-இலிருந்து ரூ.340. குலாப் ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, மில்க் கேக் ஆகியவற்றின் விலைகளும் ஏறியுள்ளன.
பானங்கள், தயிர்: 200 மி.லி. மில்க் ஷேக் ரூ.30-இலிருந்து ரூ.35; 200 மி.லி. மோர் ரூ.8-இலிருந்து ரூ.10; 200 கிராம் தயிர் ரூ.18-இலிருந்து ரூ.21; 500 மி.லி. தயிர் ரூ.35-இலிருந்து ரூ.40; ஒரு கிலோ பிரீமியம் தயிர் ரூ.120-இலிருந்து ரூ.130. மாவின் விலை ரூ.20-இலிருந்து ரூ.25 ஆகியுள்ளது.
தின்பண்டங்கள்: 200 கிராம் ஆவின் மிக்சர் ரூ.100-இலிருந்து ரூ.110; 200 கிராம் பட்டர் முறுக்கு ரூ.80-இலிருந்து ரூ.95; 80 கிராம் குக்கீஸ் ரூ.35-இலிருந்து ரூ.40. லஸ்ஸி, யோகர்ட், பால் பேடா, பால் பவுடர் ஆகியவற்றின் விலைகளும் மாற்றப்பட்டுள்ளன.
















