ஆவின் பால் உபபொருட்களை வாங்கும் மக்களுக்கு நாளை (அக்டோபர் 28) முதல் கூடுதல் செலவு ஏற்படும். மொத்தம் 67 பொருட்களின் விலைகளை 8 முதல் 15 சதவீதம் வரை ஆவின் உயர்த்தியுள்ளது.
புதிய விலைப்பட்டியலின்படி ஒரு லிட்டர் நெய் ரூ.780-க்கும், அரை லிட்டர் நெய் ரூ.400-க்கும் விற்கப்படும். 100 கிராம் வெண்ணெய் ரூ.70, ஒரு கிலோ தயிர் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனிப்பு வகைகள், பால் பவுடர், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் விலையும் மாறியுள்ளது.
இந்த முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, உயர்வை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.
ஆவின் நிர்வாகம் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது. தயாரிப்புச் செலவு, மூலப்பொருள் விலை ஆகியவை சில மாதங்களாகக் கூடியதால் நிறுவனத்துக்கு தொடர் இழப்பு ஏற்பட்டதாக அது கூறுகிறது. தனியார் மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களின் பொருட்களைவிட ஆவின் விலை இன்னும் குறைவு என்றும், லாபம் நோக்கமின்றி செலவை ஈடுகட்டவே இந்த மாற்றம் என்றும் தெரிவித்துள்ளது. கூடுதலாகக் கிடைக்கும் வருவாயில் 90 சதவீதத்துக்கும் மேல் பால் உற்பத்தியாளர்களுக்குச் செல்லும் என்பதும் நிர்வாகத்தின் விளக்கம்.
















