சென்னை உயர்நீதிமன்றம் அருகே இன்று அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.
திருவிடந்தை – தீவுத்திடல் வழித்தடத்தில் இயங்கும் 109A எண் பேருந்து, ராஜாஜி சாலையிலிருந்து பூக்கடை நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. உயர்நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் கார்களே சேதமடைந்தவை.
விபத்து நடந்தவுடன் பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். போக்குவரத்து போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

















